6. ஆற்றும் துணையால் அறம்
ஆற்றுந் துணையால் அறஞ்செய்கைமுன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே
வாய்ப்பு உடையாராகி வலவைகள் அல்லாரை
காப்பு அடைய கோடல் இனிது
எவை நன்மை தரும்:
இயன்றவரை கொடையளித்து உதவுவது,
சான்றோர் கூறும் சிறப்புமிக்க அறிவுரை,
செருக்கற்ற, தகுதிகள் பல கொண்டவரின் துணை,
ஆகியன நன்மை தருவனவாம்.
Āṟṟum tuṇaiyāl aṟam ceykai muṉ iṉitē
pāṟpaṭṭār kūṟum payamoḻi māṇpu iṉitē
vāyppu uṭaiyārāki valavaikaḷ allārai
kāppu aṭaiya kōṭal iṉitu
---
No comments:
Post a Comment