5. கொல்லாமை முன் இனிது
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கொல்லாமை முன் இனிது கோல் கோடி மாராயன்
செய்யாமை முன் இனிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு
எவை நன்மை தரும்:
எந்தவொரு உயிரையும் கொல்லாதிருப்பது,
நடுநிலை தவறி தகுதியற்றோரைப் பாராட்டாதிருப்பது,
முறைதவறித் தீங்கிழைத்து செங்கோல் தவறாதிருப்பது,
எவர் திறமையிலும் குற்றம் கண்டு குறை கூறாதிருப்பது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Kollāmai muṉ iṉitu kōl kōṭi mārāyaṉ
ceyyāmai muṉ iṉitu ceṅkōlaṉ ākutal
eytum tiṟattāl iṉitu eṉpa yārmāṭṭum
pollāṅku uraiyāmai naṉku
---
No comments:
Post a Comment