Friday, September 6, 2019

8. ஊரும் கலி மா உரன் உடைமை



8.  ஊரும் கலி மா உரன் உடைமை 


ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெம் சமத்து
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது

எவை நன்மை தரும்:
போர்வீரர் வலிமையான குதிரையைப் பெற்றிருப்பது,
மாலையணிந்த மன்னர் போர்க்களத்தில் கரிய மலைகளை ஒத்த யானைகளை வெல்வது, 
அன்புடையவர் கலங்காது வழிநடத்தும் வகையில் நல்ல வினாக்களை எழுப்புவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Ūrum kali mā uraṉ uṭaimai muṉ iṉitē
tār puṉai maṉṉar tamakku uṟṟa vem camattu
kār varai pōl yāṉai katam kāṇṭal muṉ iṉitē
ārvam uṭaiyār āṟṟavum nallavai
pētuṟār kēṭṭal iṉitu


---




No comments:

Post a Comment