Friday, September 6, 2019

9. தங்கண் அமர்பு உடையார்



9.  தங்கண் அமர்பு உடையார்


தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கையராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே
அம் கண் விசும்பின் அகல் நிலா காண்பு இனிதே
பங்கம் இல் செய்கையர் ஆகி பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது

எவை இன்பம் தரும்:
தம்முடன் நட்பிலிருப்பவர் செல்வந்தராக இருப்பது, 
அகன்ற வானில் முழுநிலவைக் காண்பது, 
குற்றம் இழைக்காதவராக எவரிடமும் இரக்கம் கொள்ளும் அன்புடையவராய் வாழ்வது, 
ஆகியன இன்பம் தருவனவாம்.

Taṅkaṇ amarpu uṭaiyār tām vāḻtal muṉ iṉitē
am kaṇ vicumpiṉ akal nilā kāṇpu iṉitē
paṅkam il ceykaiyar āki parintu yārkkum
aṉpuṭaiyar ātal iṉitu


---




No comments:

Post a Comment