Friday, September 6, 2019

1. பிச்சை புக்குஆயினும் கற்றல்



1.  பிச்சை புக்குஆயினும் கற்றல்


பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது ஆங்கு இனிதே
தெற்றவும் மேலாயார் சேர்வு

எவை நன்மை தரும்:
பிச்சை எடுத்தாலாவது கல்வியைக் கற்பது,
அவ்வாறு கற்ற கல்வி தக்க நேரத்தில் ஆன்றோர் அவையில் உதவுவது, 
முத்துப்பல் புன்முறுவல் கொண்ட பெண்களின் வாய்மொழி, 
பெரியோர் துணையைச் சேர்ந்திருத்தல்,
ஆகியன நன்மை தருவனவாம்.

Piccai pukku'āyiṉum kaṟṟal mika iṉitē
nal capaiyil kaikkoṭuttal cālavum muṉ iṉitē
muttu ēr muṟuvalār col iṉitu āṅku iṉitē
teṟṟavum mēlāyār cērvu


---




No comments:

Post a Comment