Friday, September 6, 2019

2. உடையான் வழக்கு இனிது



2.  உடையான் வழக்கு இனிது


உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நான்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
உடையான் வழக்கு இனிது ஒப்ப முடிந்தால்
மனை வாழ்க்கை முன் இனிது மாணாதாம்ஆயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத்தான் இனிது நன்கு

எவை நன்மை தரும்:
செல்வம் உள்ளவர் கொடையளிப்பது,
மனமொத்த கணவன் மனைவியின் இல்வாழ்க்கை, 
உலக வாழ்வின் நிலையாமை உணர்ந்து தாமதிக்காது பற்றறுத்து துறவறம் மேற்கொள்வது,  
ஆகியன நன்மை தருவனவாம்.

Uṭaiyāṉ vaḻakku iṉitu oppa muṭintāl
maṉai vāḻkkai muṉ iṉitu māṇātāmāyiṉ
nilaiyāmai nōkki neṭiyār tuṟattal
talaiyākattāṉ iṉitu naṉku


---




No comments:

Post a Comment