10. கடம் உண்டு வாழாமை
கடமுண்டு வாழாமை காண்டல்இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு
எவை நன்மை தரும்:
கடன்பட்டு வாழும் வாழ்வை வாழாமலிருப்பது,
பண்பற்ற பெண்களுடன் உறவு கொள்ளாதிருப்பது,
தீங்கிழைப்பவரிடம் இருந்து அஞ்சி விலகிவிடுவது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Kaṭam uṇṭu vāḻāmai kāṇṭal iṉitē
niṟai māṇpu il peṇṭirai nīkkal iṉitē
maṉa māṇpu ilātavarai añci akaṟal
eṉai māṇpum tāṉ iṉitu naṉku
---
No comments:
Post a Comment