Friday, September 6, 2019

11. அதர் சென்று வாழாமை



11.  அதர் சென்று வாழாமை


அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர் சென்று தாம் படினும் உண்ணார் கைத்து உண்ணா
பெருமை போல் பீடு உடையது இல்

எவை நன்மை தரும்:
முறை தவறிய வாழ்வை வாழாதிருப்பது, 
தவறாகப் பொருள் உணர்ந்து கொள்ளாத மதிநுட்பம், 
உயிரே போனாலும் விருந்தோம்பல் இல்லா இடத்தில் உண்டு மதிப்பிழக்காமல் இருப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Atar ceṉṟu vāḻāmai āṟṟa iṉitē
kutar ceṉṟu koḷḷāta kūrmai iṉitē
uyir ceṉṟu tām paṭiṉum uṇṇār kaittu uṇṇā
perumai pōl pīṭu uṭaiyatu il


---




No comments:

Post a Comment