12. குழவி பிணி இன்றி வாழ்தல்
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே
மயரிகள் அல்லராய் மாண்புடையார் சேரும்
திருவும் தீர்வு இன்றேல் இனிது
எவை நன்மை தரும்:
குழந்தைகள் நோயற்று வாழ்வது,
ஆன்றோர் அவையில் துணிவுடன் கருத்துரைக்க உதவும் கல்வி,
தெளிந்த அறிவுடைய பண்பாளரின் செல்வம் அவரிடம் நிலைத்திருப்பது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Kuḻavi piṇi iṉṟi vāḻtal iṉitē
kaḻaṟum avai añcāṉ kalvi iṉitē
mayarikaḷ allarāy māṇpuṭaiyār cērum
tiruvum tīrvu iṉṟēl iṉitu
---
No comments:
Post a Comment