13. மானம் அழிந்த பின் வாழாமை
மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே
தானம் அழியாமை தான் அடங்கி வாழ்வு இனிதே
ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது
எவை நன்மை தரும்:
பெருமை அழிந்த பிறகு வாழாதிருப்பது,
வரவுக்குள் செலவு செய்து வாழ்வது,
குறைவற்ற, சிறந்த செல்வம் உடையவராய் வாழ்வது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Māṉam aḻinta piṉ vāḻāmai muṉ iṉitē
tāṉam aḻiyāmai tāṉ aṭaṅki vāḻvu iṉitē
ūṉam oṉṟu iṉṟi uyarnta poruḷ uṭaimai
māṉiṭavarkku ellām iṉitu
---
No comments:
Post a Comment