Friday, September 6, 2019

15. பிறன் மனை பின் நோக்கா பீடு



15.  பிறன் மனை பின் நோக்கா பீடு


பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது ஆற்ற
வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே
மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது

எவை நன்மை தரும்:
பிறர் மனைவியைத் திரும்பியும் பாராத பெருமை, 
வறட்சியால் வாடும் பயிர்களுக்கு வான்மழை பொழிவது, 
வீரமிக்க மன்னவரின் கோட்டையின் புறத்தே மலை போன்ற யானைகள் பிளிறுவதைக்  கேட்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Piṟaṉ maṉai piṉ nōkkā pīṭu iṉitu āṟṟa
vaṟaṉ uḻakkum paim kūḻkku vāṉ cōrvu iṉitē
maṟa maṉṉar tam kaṭaiyuḷ mā malai pōl yāṉai
mata muḻakkam kēṭṭal iṉitu


---




No comments:

Post a Comment