Friday, September 6, 2019

16. கற்றார் முன் கல்வி உரைத்தல்



16.  கற்றார் முன் கல்வி உரைத்தல்


சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகுஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
மிக்காரை சேர்தல் மிக மாண முன் இனிதே
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது

எவை நன்மை தரும்:
கற்றோர் முன் தனது கல்வித் திறமையைக் காட்டுவது, 
அறிவிற் சிறந்தோரைத் துணையாகக் கொள்வது, 
எள்ளளவும் பிறரிடம் பொருள் பெறாது தான் பிறருக்குக் கொடையளிப்பது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Kaṟṟār muṉ kalvi uraittal mika iṉitē
mikkārai cērtal mika māṇa muṉ iṉitē
eḷ tuṇaiyāṉum iravātu tāṉ ītal
ettuṇaiyum āṟṟa iṉitu


---




No comments:

Post a Comment