Friday, September 6, 2019

18. மன்றில் முது மக்கள் வாழும் பதி



18.  மன்றில் முது மக்கள் வாழும் பதி


மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
மன்றில் முது மக்கள் வாழும் பதி இனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே
எஞ்சா விழு சீர் இரு முது மக்களை
கண்டு எழுதல் காலை இனிது

எவை நன்மை தரும்:
சான்றோர் கூடும் அறங்கூறும் அவை உள்ள ஊரில் வாழ்வது 
அறநூல் உரைத்தவாறு தவநெறியில் வாழ்பவரின் பெருமை 
மிக்க சிறப்புடைய பெற்றோரைக் காலையில் தொழுது எழுவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Maṉṟil mutu makkaḷ vāḻum pati iṉitē
tantirattiṉ vāḻum tavacikaḷ māṇpu iṉitē
eñcā viḻu cīr iru mutu makkaḷai
kaṇṭu eḻutal kālai iṉitu


---




No comments:

Post a Comment