19. நட்டார் புறங்கூறான் வாழ்தல்
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நட்டார் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே
பட்டாங்கு பேணி பணிந்து ஒழுகல் முன் இனிதே
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது
எவை நன்மை தரும்:
நண்பர்களைக் குறை கூறாமல் வாழ்வது,
வழக்காற்றை மதித்து அதற்கேற்ப வாழ்வது,
குறைவறப் பெரும்பொருள் ஈட்டி தேவையானவருக்குக் கொடுத்துதவி வாழ்வது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Naṭṭār puṟaṅkūṟāṉ vāḻtal naṉi iṉitē
paṭṭāṅku pēṇi paṇintu oḻukal muṉ iṉitē
muṭṭu il perum poruḷ ākkiyakkāl maṟṟu'atu
takkuḻi ītal iṉitu
---
nice
ReplyDelete