3. ஏவது மாறா இளம் கிளைமை
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஏவது மாறா இளம் கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே
ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே
தேரின் கோள் நட்பு திசைக்கு
எவை நன்மை தரும்:
பெற்றோர் சொல்லை மீறாத மக்களைக் கொண்டிருப்பது,
பிழையற நாளும் கல்வியினைக் கற்பது,
ஏருடைய உழவருக்கு வேளாண்மை செய்வது,
செல்லும் திசையெல்லாம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்,
ஆகியன நன்மை தருவனவாம்.
Ēvatu māṟā iḷam kiḷaimai muṉ iṉitē
nāḷum navai pōkāṉ kaṟṟal mika iṉitē
ēruṭaiyāṉ vēḷāṇmaitāṉ iṉitu āṅku iṉitē
tēriṉ kōḷ naṭpu ticaikku
---
No comments:
Post a Comment