23. காவோடு அற குளம் தொட்டல்
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
காவோடு அற குளம் தொட்டல் மிக இனிதே
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
பாவமும் அஞ்சாராய் பற்றும் தொழில் மொழி
சூதரை சோர்தல் இனிது
எவை நன்மை தரும்:
அறச்செயலாக சோலை அமைத்து, குளம் வெட்டுவது,
அந்தணர்களுக்கு பசுவும் பொன்னுமாக கொடை அளிப்பது,
பழிக்கு அஞ்சாமல், சூதுக்கு அடிமையாகி பொய்யுரைத்து வாழும் சூதாடுபவர்களை விலக்கிவிடுவது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Kāvōṭu aṟa kuḷam toṭṭal mika iṉitē
āvōṭu poṉ ītal antaṇarkku muṉ iṉitē
pāvamum añcārāy paṟṟum toḻil moḻi
cūtarai cōrtal iṉitu
---
No comments:
Post a Comment