24. வெல்வது வேண்டி வெகுளாதான்
வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது
எவை நன்மை தரும்:
வென்றுவிடவேண்டும் என்ற துடிப்பால் வெகுண்டு எழாத கட்டுப்பாடு,
இயன்றவரை மேற்கொண்ட செயலை முடித்துவிட விரும்பும் பொறுமை,
கிட்டாதவற்றுக்காக ஏங்கித் துயருற்று இரங்கத்தக்க நிலைக்குச் செல்லாது இயன்றதைச் செய்வது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Velvatu vēṇṭi vekuḷātāṉ nōṉpu iṉitē
ollum tuṇaiyum oṉṟu uyppāṉ poṟai iṉitē
illatu kāmuṟṟu iraṅki iṭarppaṭār
ceyvatu ceytal iṉitu
---
No comments:
Post a Comment