26. நச்சி தற்சென்றார் நசை கொல்லா
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நச்சி தற்சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே
உட்கு இல்வழி வாழா ஊக்கம் மிக இனிதே
எ திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல்
எவை நன்மை தரும்:
ஒன்றை விரும்பித் தன்னிடம் வந்தவரின் விருப்பத்தை அழிக்காது நிறைவேற்றும் பண்பு,
மதிப்பளிக்காத இடத்தில் வாழவிரும்பாத மனத்திட்பம்,
எவ்வகையிலும் தன்னால் வழங்க இயன்றதை மறைக்காது வழங்கும் அன்பு,
ஆகியன நன்மை தருவனவாம்.
Nacci taṟceṉṟār nacai kollā māṇpu iṉitē
uṭku ilvaḻi vāḻā ūkkam mika iṉitē
e tiṟattāṉum iyaiva karavāta
paṟṟiṉil pāṅku iṉiyatu il
---
No comments:
Post a Comment