28. ஆற்றானை ஆற்று என்று அலையாமை
ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல்
எவை நன்மை தரும்:
செய்துமுடிக்கும் திறமை இல்லாதவரிடம் அந்த வேலையை ஒப்படைக்காது இருப்பது,
உயிர்வாழ்தல் நிலையற்றது என்ற உண்மையை உணர்ந்து வாழ்வது,
செல்வம் கைவிட்டுப்போகும் என்றாலும் அறமற்ற சொற்களைக் கூறிவிடாத அறிவிருப்பது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Āṟṟāṉai āṟṟu eṉṟu alaiyāmai muṉ iṉitē
kūṟṟam varavu uṇmai cintittu vāḻvu iṉitē
ākkam aḻiyiṉum allavai kūṟāta
tērcciyil tērvu iṉiyatu il
----
No comments:
Post a Comment