4. யானையுடை படை காண்டல்
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
யானையுடை படை காண்டல் மிக இனிதே
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே
கான் யாற்று அடைகரை ஊர் இனிது ஆங்கு இனிதே
மானம் உடையார் மதிப்பு
எவை நன்மை தரும்:
அரசர் யானைப்படையைக் கொண்டிருப்பது,
பிற உயிர்களைக் கொன்று உண்டு தனது உடலை வளர்க்காதிருப்பது,
ஆற்றின் கரைகளில் பூம்பொழில்கள் கொண்ட ஊரில் வாழ்வது,
மதிக்கத் தக்கவரைப் போற்றுவது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Yāṉaiyuṭai paṭai kāṇṭal mika iṉitē
ūṉai tiṉṟu ūṉai perukkāmai muṉ iṉitē
kāṉ yāṟṟu aṭaikarai ūr iṉitu āṅku iṉitē
māṉam uṭaiyār matippu
---
No comments:
Post a Comment