Friday, September 6, 2019

30. நன்றி பயன் தூக்கி வாழ்தல்





30.  நன்றி பயன் தூக்கி வாழ்தல்


நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத
நன்றியின் நன்கினியது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே
மன்ற கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே
அன்று அறிவார் யார் என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கு இனியது இல்

எவை நன்மை தரும்:
பெற்ற உதவியை நன்றியுடன் நினைத்து வாழ்வது, 
நீதிமன்றத்தில் பொய் உரைத்திடாத  மேன்மை, 
அடைக்கலமாகக் கொடுத்த பொருளை அறிந்தவர் யாரும் இல்லை என்று அதனைக் கவர எண்ணாத நேர்மை, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Naṉṟi payaṉ tūkki vāḻtal naṉi iṉitē
maṉṟa koṭumpāṭu uraiyāta māṇpu iṉitē
aṉṟu aṟivār yār eṉṟu aṭaikkalam veḷavāta
naṉṟiyiṉ naṉku iṉiyatu il


---



No comments:

Post a Comment