Friday, September 6, 2019

31. அடைந்தார் துயர் கூரா ஆற்றல்



31.  அடைந்தார் துயர் கூரா ஆற்றல்


அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே
சிறந்து அமைந்த கேள்வியர்ஆயினும் ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது

எவை நன்மை தரும்:
உதவி நாடி வந்த துயருற்றவரின் துன்பத்தைக் குறைப்பது, 
கடன் வாங்கியாவது செய்யவேண்டிய கடமைகளைச் செய்வது, 
அறிவிற் சிறந்தவர் என்றாலும் ஆராய்ந்த பின்னர் தம் கருத்தை வெளிப்படுத்துவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Aṭaintār tuyar kūrā āṟṟal iṉitē
kaṭaṉ koṇṭum ceyvaṉa ceytal iṉitē
ciṟantu amainta kēḷviyar'āyiṉum ārāyntu
aṟintu uraittal āṟṟa iṉitu

---




No comments:

Post a Comment