36. அவ்வித்து அழுக்காறு உரையாமை
அவ்வித் தழுக்கா றுரையாமைமுன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே
செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு இனிதே
கவ்வி தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது
எவை நன்மை தரும்:
மனம் திரிந்து பொறாமையைக் காட்டும் சொற்களைக் கூறாதிருப்பது,
நல்ல மனம் கொண்டவராய் சினத்தை ஒதுக்கி வாழ்வது,
மனம் கவர்ந்தவற்றைக் கண்டதும் ஆசை கொண்டு அதைக் களவாடாது மறந்துவிடுவது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Avvittu aḻukkāṟu uraiyāmai muṉ iṉitē
cevviyaṉāy ceṟṟu ciṉam kaṭintu vāḻvu iṉitē
kavvi tām koṇṭu tām kaṇṭatu kāmuṟṟu
vavvār viṭutal iṉitu
---
No comments:
Post a Comment