Friday, September 6, 2019

37. இளமையை மூப்பு என்று உணர்தல்



37.  இளமையை மூப்பு என்று உணர்தல் 


இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
லிடமென் றுணர்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே
தட மென் பணை தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது

எவை நன்மை தரும்:
இளவயதிலேயே முதுமை தரும் மனப்பக்குவம் கொண்டிருப்பது,   
உறவினர்கள் அன்புமொழிகள் கூறுபவராக இருப்பது, 
மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட தளிர் போன்ற இளம் பெண்கள் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிவடைவது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Iḷamaiyai mūppu eṉṟu uṇartal iṉitē
kiḷaiñarmāṭṭu accu iṉmai kēṭṭal iṉitē
taṭa meṉ paṇai tōḷ taḷir iyalārai
viṭam eṉṟu uṇartal iṉitu


---



No comments:

Post a Comment