38. சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென் பால்படுங்
கற்றா உடையான் விருந்து.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே
எ துணையும் ஆற்ற இனிது என்ப பால் படும்
கற்றா உடையான் விருந்து
எவை நன்மை தரும்:
சிறந்த போர்க் கருவிகளைத் தாங்கிய இளைஞர் படையைக் கொண்டிருப்பது,
உறவினரைக் கொண்டவர் எதிரியின் படைக்கு அஞ்சாது அழித்து ஒழிக்கும் ஆற்றல் கொண்டிருப்பது,
கன்றுடன் பால் தரும் பசுவும் கொண்டவர் அளிக்கும் விருந்து,
ஆகியன நன்மை தருவனவாம்.
Ciṟṟāḷ uṭaiyāṉ paṭaikkala māṇpu iṉitē
naṭṭār uṭaiyāṉ pakai āṇmai muṉ iṉitē
e tuṇaiyum āṟṟa iṉitu eṉpa pāl paṭum
kaṟṟā uṭaiyāṉ viruntu
---
No comments:
Post a Comment