40. பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு
பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு இனிதே
வித்து குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே
பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்
எவை நன்மை தரும்:
பற்றுள்ளவற்றைக் கொடுக்க வேண்டி இருந்தாலும் உள்ளூரில் வாழ்வது,
விதைக்கென வைத்த தானியத்தைக் குற்றி உண்ணாத மேன்மையான நிலை,
பற்பல நாட்களும் குற்றமற்ற நன்மை தரும் நூல்களைக் கற்பது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Pattu koṭuttum pati iruntu vāḻvu iṉitē
vittu kuṟṟu uṇṇā viḻuppam mika iṉitē
paṟpala nāḷum paḻutu iṉṟi pāṅku uṭaiya
kaṟṟaliṉ kāḻ iṉiyatu il
---
No comments:
Post a Comment