7. அந்தணர் ஓத்துடைமை
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே
தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது
எவை நன்மை தரும்:
பார்ப்பனர் மறை ஓதுவதை மறக்காதிருப்பது,
உறவுகளின் மீது பற்று கொண்டவர் படைக்குத் தலைமை ஏற்பது,
தந்தையே கூறினாலும் அவரது அறமற்ற அறிவுரையை ஏற்காதிருப்பது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Antaṇar ōttuṭaimai āṟṟa mika iṉitē
pantam uṭaiyāṉ paṭaiyāṇmai muṉ iṉitē
tantaiyē'āyiṉum tāṉ aṭaṅkāṉ ākumēl
koṇṭu aṭaiyāṉ ākal iṉitu
---
Excellent. அருமையான பாடல் விளக்கம். பல தளங்களை பார்த்தேன்; இங்கு உள்ளது போல் தெளிவான விளக்கம் வேறெங்கும் கிடைக்கவில்லை. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDelete